ஸ்கூலுக்கு செல்லும் வழியில், தாலிபான்கள் மலாலாவின் முகத்தில் சுடுவதற்கு முன்பாகவே அவருக்கு தெரிந்திருந்தது,
தானும், தன் தந்தையும் என்றோ ஒரு நாள் இந்த தாலிபான்களால் சுடப்பட்டு விடுவோம் என்று. ஆனால் அது அந்த நாளாக இருக்குமென்று அவர் எதிர்பார்க்கவில்லை.
சில நேரங்களில், ஸ்கூலிலிருந்து வீட்டிற்க்கு செல்லும் வழியில், யாரோ சிலர் துப்பாக்கியுடன் வழி மறிப்பது போல் கற்பனை செய்துக்கொள்வார்,
அப்பொழுதெல்லாம் “மலாலா” சொல்ல துடித்தது ஒன்று தான் :
” நீ ஏந்திய துப்பாக்கியின் எதிரில் நின்றுக்கொண்டிருக்கும் சிறுமி நான். சரி, சுடு. அதற்கு முன் நான் சொல்வதைக்கேள், நான் உனக்கு என்ன தீங்கு செய்தேன் என்பதெல்லாம் தெரியாது. எனக்கென்று ஒரு தேவை இருக்கிறது.
அது,
உங்கள் தாலிபான் இயக்கம் அடிமைப்படுத்தி, கல்வி கற்க விடாமலிருக்கும் பெண்கள் அனைவரையும் கல்வி கற்க வைப்பதே! “
( Book : I Am Malala, The Girl Who Stood Up for Education and Was Shot by the Taliban by Malala Yousafzai. )
மலாலா யூசஃப்ஸாய், அஃப்கானில் பெண்களின் கல்விக்காகவும், சமத்துவத்திற்காகவும், போராடிக்கொண்டிருப்பவர். 1998ல் நடந்ததைப்போலவே ( பெண்களுக்கு எதிரான சட்டங்கள் ) இந்த முறையும் நடக்ககூடும் எனவும், அங்கு வாழும் குடிமக்களையும், அந்நாட்டில் அகதிகளாக இருப்பவர்களையும் பாதுகாக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார் ( Source : Twitter )
இந்த செய்தி, கேட்டோர் அனைவரையும் மிகுந்த பயத்திலும் வருத்தத்திலும் தள்ளியது.
ஆனால்,
அஃப்கானிஸ்தானில், தாலிபான்களால் கடும் சட்டம் பாய்ந்தது. இசை, நடனம், சினமா முதலியனவற்றிற்கும் தடை விதிக்கப்பட்டது. ஆடை கட்டுபாடுகள், பெண்கள் வெளியில் செல்ல தடை. கல்வி கற்க தடை. வீட்டிலிருந்தபடி ஆண்களுக்கு சேவை மட்டுமே செய்யவேண்டும் என்பதையெல்லாம் பார்த்ததையும், கேட்டதையும் பகிர்ந்துக்கொண்டும், பேசிக்கொண்டிருக்கும் சில வாய்கள் தான்,
இங்கு ( இந்தியா ) இந்து தாலிபான்களால் நிகழும் / நிகழ்த்தும் பிரச்சனைகளை எதிர்த்தோ, தீண்டாமையால் நடக்கும் சீர்கேடுகளை எதிர்த்தோ, தேச பற்று என்னும் பெயரில் நடக்கும் கூத்துகளை பற்றியும்
ஏதும் பேசாமல்,
நா ( நாக்கு ) அறுபட்ட உயிரினங்கள் போல உலாவியபடி இருக்கின்றனர்.
இன்னும் சில மிருகங்கள், அஃப்கானில் பெண்கள் மீது பாய்ந்த சட்டங்கள் சரி என சொல்லிக்கொண்டும். அது போன்றொறு சட்டம் இங்கும் வர வேண்டுமென எதிர்பார்க்கும் இந்த,
இந்து தலிபான்களிடமிருந்து எச்சரிக்கையாகவே இருப்போம்.