A death in the Gunj by Konkona Sen Sharma

சிலரின் நிராகரிப்புகள் சில மனிதர்களை பக்குவப்படுத்தும், சிலரை மிருகமாக்கும் இன்னும் சிலரை வாழ்க்கையின் கடைசி புள்ளிக்கு தள்ளும்.

இங்கு நடக்கும் சில தற்கொலைகள் நிராகரிப்புகளாலும், ஏமாற்றங்களாலும், சில நெருக்கமானவர்களின் இழப்புகளாலும், அவர்களுக்கென ஒரு இடைவெளி ( space ) தராதததாலும், மற்றவர்களிடம் இருந்து தனித்து தெரிவதால் அந்த கூட்டத்திலிருந்து ஒதுக்கப்படுவதாலும் திரும்ப திரும்ப நடந்துக் கொண்டே இருக்கின்றது.

சிலர் அந்த வலியை கலை, இலக்கியம், இசை, பயணத்தின் வழியே கடக்க முயற்சிப்போர் உண்டு. இரவுகளில் அதிலிருந்து மீள அழுது அழுது  கடந்து வருவோருண்டு. சிலர் உச்ச நிலையை அடைந்து முட்கள் நிறைந்த மரணப் பூக்களில் விழுவதுமுண்டு. 

முகுல் ஷர்மாவின் உன்மை கதையை தழுவி எடுக்கப்பட்ட இந்த படத்தின் கதை முழுக்க ஓர் அமைதியும், வலியும் இருந்துக்கொண்டே இருக்கின்றது. ஆரம்பித்த சில நிமிடங்களிலிருந்தே வருகின்ற காட்சிகள் மனதில் வலியை தினித்துக் கொண்டே இருக்கின்றது. பின்னனியில் வரும் சில கிட்டார் இசை சில நேரம் வலியை கூட்டுகிறது.


சில சிரிப்பு, சில காதல், சில காமம், சில ஏக்கம், சில இழப்பு, சில முத்தம், சில கேலிகள் ,நிறைய நிராகரிப்புகள், தீராத தனிமை என கதை முழுக்கவும் இன்னும் சொல்லாத சில உணர்ச்சிகளை நம்முள் கடத்திக்கொண்டே இருக்கின்றது.

உணர்ச்சிகளையும், அறியாமையையும்,  கிண்டல் கேலிகளுடன் நிராகரித்து ஒதுக்கும் மனிதர்கள் வாழும் இடத்தில் வாழ விருப்பமில்லாத சில மனிதர்களைப் போலவே இதில் வருபவனும் துப்பாக்கியின் உதவியோடு மரணிக்கின்றான்.

இறந்த பிறகோ, தொலைந்த பிறகோ, அவர்களை பற்றி பேசும் நாம். இருக்கும்பொழுதில் அவர்களை பற்றி அக்கறை கொள்வதே இல்லை என்பதற்கு உதாரணமான படம்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top