நம் இருவரின் தூரத்தை துல்லியமாக சொல்லிவிட கருவிகள் ஏதேனும் இருக்கிறதா என தெரியவில்லை. ஒருவேலை இருந்தால் கடலுக்கும் நிலவுக்கும் இடையேயான தூரத்தை அது எப்படி கணக்கிடும் எனவும் […]
இருவரின் பிறப்பின் கதைகளும் இருவருக்குமே தேவையற்றவை. நானும் முதலில் பிறக்கவில்லை, நீயும் முதுகெலும்பில் இருந்து உருவாகவில்லை. எந்த பாம்பும் தடைசெய்த கனியை எந்த ஒருவரிடமும் புசிக்க தரவில்லை.
எத்தனையோ பகலிரவுக்குப் பின்னும் நினைவுகளில் இருந்து கரைந்துவிடவில்லை உன் சொல்லும், உன் மௌனமும். உன் அத்தனை பிராத்தனைக்கு பின்னும் நினைவுகளில் இருந்து அழிந்துவிடவில்லை நீயும், உன் பிம்பமும்.