ஒரு துயரில், ஒரு வலியில், ஒரு பிரிவில்
கண்ணீர் வழிந்த முகங்களில் கொஞ்சம்
புன்னகை துளிர்விட ஆரம்பித்தது.
நடு இரவில், சிறு குளிரில் ஒரு கணம் சிலிர்த்திட இரு உடல் பிணைந்திட, யாரோ கட்டமைத்த எல்லா எல்லைகளையும் சபித்தது.
கடற்கரையில், பெருமழையில்,
பொன்னிற மாலையில்
இன்மையில் அண்மையை தேடி
தொலைய தொடங்கியது.
படுத்தோ, நடந்தோ எதிர்கால கனவுகளில்
நீந்த தெரியாமல் மூழ்கி மரித்தது.
சில நேரம், சில நிமிடம் உடலும்
படபடத்து அடங்கியது.
பெரும் மௌனங்களில், பட்டாம்பூச்சிகள் பறக்க
கண்களும் விழிக்க, குறளும் நடுங்க எச்சில் நனைந்த உதடுகள் சொல்ல துடித்தது எல்லாவற்றிற்குமான பதிலை ஒரே சொல்லில் “நானும்” என்று.
நானும்