நம் இருவரின் தூரத்தை துல்லியமாக
சொல்லிவிட கருவிகள் ஏதேனும்
இருக்கிறதா என தெரியவில்லை.
ஒருவேலை இருந்தால் கடலுக்கும்
நிலவுக்கும் இடையேயான தூரத்தை அது
எப்படி கணக்கிடும் எனவும் புரியவில்லை.
நம் இருவரும் இணைந்திருந்த ஒரு புள்ளியில்
மலை முலைத்து பனிபொழிவதாக ஒரு தகவல்.
ஆம், மலை முலைத்து பனிபொழிவதாக ஒரு தகவல்.
எல்லா கனிகளை பறித்து தந்த ஒருவளும்
எல்லா கனிகளை கடித்து பகிர்ந்த ஒருவனும்
அங்கே இருக்க இனி வாய்ப்பே இல்லை.
ஆனாலும், இப்பொழுது
பிரிந்ததற்க்கு பிறகும்,
யாரோ ஒருவர்
பிம்பத்தினை
காதல் செய்தபடியே அந்த
புள்ளியில் தனித்து
நின்றிருக்கலாம் தானே.
அவருக்கு என் சாயலோ, இல்லை
உங்களது சாயலோ இருப்பதில்
தவறொன்றும் இல்லை தானே.
01-Aug-23