முன் எப்போதும் உங்களுக்கு
நடத்திராத ஒரு நிகழ்வு தான் இது.
உலர்ந்த கண்களிலிருந்து உங்கள்
அனுமதியின்றி ஒரு பக்கமாய்
கண்ணீர் வழிகிறது.
ஒரு துளி அன்பிற்கு யாசகம் அலைந்த
உங்களின் மேல் தேவதைகளின் முத்தம்
மழையாய் பனியாய் பொழிகிறது.
எந்த வயதிலும் ஏற்பட்டிராத தயக்கம்
உடலோடு புகுந்து உயிரோடு பரவ
தொடங்கி விட்டிருந்தது.
எல்லா கதைகளையும் பேசி முடித்தும்
மிச்சமிருந்த ரகசியத்தை தாமதமின்றி
உளறலில் வந்து தீர்ந்தது.
தினம் செய்யும் பிராத்தனையில் கூடுதலாக
இன்னொரு பெயரை சேர்த்து உதடுகள்
முனுமுனுக்க தொடங்கியது.
இவைகளை விட,
கண்ணாடி பிம்பத்தை
இரு கண் மைகளை
கை விரல் நகத்தை
காதல் பாடல்களை
குழி விழும் கண்ணத்தை
குளிரான இரவுகளை
காற்றிடம் நீட்டும் கரத்தை
முத்தமிடாத உதடுகளை
அது இதுவென எல்லாவற்றையும்
ரசிக்க ஆரம்பித்த பின்
உங்களை நீங்கள் நேசிப்பதை விடவும்,
முன்பிருந்ததை விட ஒரு தனிநபரை அதிகமாக
நேசிக்க செய்வீர்கள். அதற்கு எந்த உலகத்திலும்
எந்த பெயரும் இல்லை.
ஆம்! எந்த உலகத்திலும் தான்!!
ஆனால், யாருக்கும் தெரியாத ஒரு உண்மை,
எல்லாருக்கும் தெரிந்த ஒரு பொய் என்பது
நீங்கள் இருவரும் அதற்கு சத்தங்களை பெயராக வைத்தது தான்.