இன்னமும் கையாள தெரியவில்லை
இளவெப்பமான கை பினைப்பை
உலறலுக்கு பிறகான உரசல்களை
சடாரென மோதிக்கொள்ளும் விழிகளை
குறுஞ்சிரிப்போடு மழுப்பும் உதடுகளை
தொட்டு விளையாட துடிக்கும்
கண்ணக்குழியினை
புரியாத தயக்கத்தினை,
புதிர் நிரம்பி வழியும்
சிக்கலான இந்த உறவினை,
எனக்கென செய்துக்கொண்டதாக
சொன்ன பிராத்தனையை
படபடக்கும் இந்த உடலினை
நீ விலக விலக உன் மேல்
கூடும் இந்த உணர்ச்சியை,
என எதையுமே
கையாள தெரியவில்லை
அன்பே.
உணர மட்டுமே முடிகின்ற
சத்தமில்லா முத்தத்தினைபோல
எந்த விளக்கங்களும் கேட்டோ / கொடுத்தோ
பரிமாரிக்கொள்ள இது எதற்க்கும்
யாரிடமும் சொற்களே இல்லை.
அதனால் என்ன, மழையோடு
வெயில் வந்து, மேகத்தில்
வானவில் இணைவது போல,
அது அது எப்படியோ அது அதுவாகவே
இருந்துக்கொள்ளட்டும்.