எத்தனையோ பகலிரவுக்குப் பின்னும்
நினைவுகளில் இருந்து கரைந்துவிடவில்லை
உன் சொல்லும், உன் மௌனமும்.
உன் அத்தனை பிராத்தனைக்கு பின்னும்
நினைவுகளில் இருந்து அழிந்துவிடவில்லை
நீயும், உன் பிம்பமும்.
இப்பவும், திரக்காது என தெரிந்தும்
நாம் இருவரும் நின்றிருந்த
அதே தாழிடப்படாத கதவருகினில்
நின்றபடியே தான் இருக்கின்றேன்.
வெகுகாலமாய் காலுக்கடியில்
முளைத்த வேர் ஏனோ இப்பொழுது
தான் வலிக்கவே செய்கிறது!
எப்படி இருந்தால் என்ன, எப்பவும் போல
இதை எதையுமே நீ அறியவேண்டாம்
அன்பே!
16-Jul-2023
_____________________________________________________
கடைசியாய் கையசைத்து
வழியனுப்பும் முன்
கொஞ்சமாய் சிரித்து
சத்தத்தை மறைத்து
காற்றோடு முத்தம் தந்து
திரும்பிச்செல் அன்பே!
நம் அடுத்த சந்திப்பின் உரையாடலில்
நீ எனக்கெனவென தந்த முத்தத்தின்
எண்ணிக்கைகள் இத்தனையென
சொல்ல சொல்ல, நீ எப்படியென
விழிக்கும்பொழுதில்
உன் முத்தங்கள் நிரம்பிய
என் உப்பு ஜாடியை உன்னிடமே
காண்பிப்பேன்.
கடைசி முத்தத்தை
தவிற, மற்ற எல்லாவற்றிற்க்கும்
உனக்கு பிடித்த வண்ணத்திலே
சிறகு முலைத்திருப்பதை நீ காண
அந்த கடைசி முத்தம் உதவியாய்
இருக்கும்தானே!?
28-Jun-2023
❤❤❤
🌻❤