யார் கண்களுக்கும் புலப்படாத
ஒரு கோட்டினை கடக்க,
இருவருக்குமே மனமில்லை.
இருவரின் தேகச்சூடும், இருவரின்
படபடப்பும், இருவரும் சொல்லி
திகைக்காமல் இல்லை.
கேள்விகளே இல்லா ஒருவித
பதில்களுக்கு, தனிமையை தந்து
குழம்பாமல் இல்லை.
ஒரு நொடி கண்ணீர், ஒரு நொடி
காதல், ஒரு நொடி காமம்,
அனைத்தையும் தலையணையிடம்
ஒப்புவிக்காத நாளே இல்லை.
மழையிலோ, கரையிலோ,
கடலிலோ கால் வைக்கும்முன்
இருவரின் நினைவுகளும் வந்து
போகாமலில்லை.
கணக்கிடவே முடியாத
தூரத்தில் இருவரும் விலகியோ
பிரிந்தோ இருந்தாலும்.
எல்லா இன்பத்தின் துவக்கத்திலும்,
எல்லா சிக்கல்களின் இடையிலும்,
எல்லா இடர்பாடுகளின் முடிவிலும்,
இருவருக்குமே தெரிந்திருந்தது,
இருவரும் இருவராகவே இருக்க
இருவருமே தேவை என்று!