இருவரின் பிறப்பின் கதைகளும்
இருவருக்குமே தேவையற்றவை.
நானும் முதலில் பிறக்கவில்லை,
நீயும் முதுகெலும்பில் இருந்து
உருவாகவில்லை.
எந்த பாம்பும் தடைசெய்த கனியை
எந்த ஒருவரிடமும் புசிக்க தரவில்லை.
பின், நம் கையில் கிடந்த கனி
எப்படி கிடைத்ததென கேட்க
இருவருக்குமே மனமில்லை.
எப்படியோ அந்த கனியின்
முதற் கடிக்கு பிறகு, தடைசெய்த
உணர்ச்சிகளால் இருவரும்
தத்தளிக்க ஆரம்பித்தோம்.
சொற்கள் சலனமற்று போக,
மௌனம் முதன்மையாய் மாற,
கனி புசித்த களிப்பில் இருவருமே
மறந்திருந்தோம், யார்
ஏவாள் யார் ஆதாம் என்று!
30-Jul-2023