ஒரு துயரமான நிகழ்வை கடந்து
அந்த துயரமான நாளின் முடிவில்
பிதற்றலும் எரிச்சலும் மௌனமும்
கலந்த சொற்களை உங்கள் மீது வீசி
கண் சிமிட்டாமல் யாரேனும்
உங்களையே பார்த்து நின்றால்..
ஏன் எதற்கு என்ற வினா எழுப்பாமல்
விளக்கம் கேட்காமல், உங்கள் உலகில்
அவர்களை இழுத்து நிருத்தாமல், அனுபவ
குப்பையை அள்ளி திணிக்காமல், ஆளுமை
செலுத்தாமல், நல்லுரை, தெலிவுரை என
கரிசனைகளை போர்த்தாமல்..
அப்படியே அள்ளி அவர்களை அணைத்துக்
கொள்ளுங்கள், தன்னியல்பில் வழியும்
கண்ணீரை துடைத்து கண்ணங்களையும்
முத்தமிடுங்கள்.
உடல் மேல் ஊரும் விரல்களை இன்னும்
உணர வையுங்கள். ஆசைக்கும் எதார்த்த
வாழ்விற்கும் இடையில் ஊசலாடும் உயிரை
உங்கள் தோளோடு கிடத்திக் கொள்ளுங்கள்.
எந்த சத்தமும் வேண்டாம், எந்த சொற்களும்
வேண்டாம். கண் கலங்கி கண் விழிக்கும்
பொழுதில் ஏதோ ஒரு புரிதலோடு பரஸ்பரம்
ஒரு பார்வையும், ஒரு சிரிப்பும், சிறு அணைப்பும்
போதும்.
இந்த மானுடமே அழகாகி போக அந்நொடியில்
அதை தவிர வேறெதுவும் தேவையில்லை தானே!
ஆதலால்,
இதோ அருகில் வந்துவிட்டேன்
நீங்கள் அங்கேயே நில்லுங்கள்
என் அன்பரே!