எல்லோரும் உறங்கும் இந்த இரவில்,
நீங்கள் மறந்துபோன வாசம் நிறைந்த
பூக்கள் உங்கள் உடலின் எல்லா பகுதிகளிலும்
முலைக்க ஆரம்பித்தது. அதற்கு அல்லி,
மல்லியென எல்லா பெயர்களும் பொருந்தும்.
எப்போதும் இல்லாதது போல கரைய
துவங்கிய உடலில் எதற்கிந்த
மாற்றங்கள் நிகழ்கின்றன, எதுவும்
உங்களுக்கு புரியவில்லை.
பார்ப்பது அழகாகி, பாரங்கள் லேசாகி,
வடுக்கள் எல்லாம் அழிந்துப்போனதை மறந்து
புன்னகைத்து அமர்ந்து இருக்கின்றீர்கள்.
காடுகள், கண்டங்கள், கடல்கள், மலைகள்,
தெருக்கள் எல்லாம் கடந்து வரும் இந்த அன்புக்கு இதுபோலெல்லாம் மாற்றங்கள் நிகழும் என நீங்கள் ஒருபோதும் கற்பனை செய்திராதவை தான்.
இன்னும் இது ஏதேதோ செய்யும், இருந்தும் என்ன செய்யுமென அறிய விரும்பவில்லை நீங்கள்.
இப்போதைக்கு, எந்த நிகழ்விலும் இதுவரை
அசைந்திராத கால்கள், கடலுக்கு அப்பால் அந்த
பக்கத்து கரையில் மிதக்கவோ பறக்கவோ
துவங்கியதாக கற்பனை செய்ய துவங்கிவிட்டீர்கள்.
இனி நீங்கள் நம்பினாலும், இல்லாவிட்டாலும்
யாரோ ஒருவரால் அல்ல யாரோ ஒருவரை நேசிக்க துவங்கிவிட்டீர்கள் என்பது உங்களுக்கு மட்டும் தெரிந்த உண்மை!
ஆதலால் காதலிக்கின்றேன்